பெரம்பலூர், செப். 27: வேப்பந்தட்டை அரசுக் கல்லூரியில் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இயக்கத்தின் சார்பில் பிறப்பு, இறப்பு பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் இயக்கத்தின் சார்பில் நேற்று (26ம்தேதி) காலை 10.30 மணியளவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு குறித்த விழிப் புணர்வு நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் (பொ) சேகர் தலைமையில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் பெரம்பலூர் மாவட்ட சுகாதாரஅலுவலர் டாக்டர் பிரதாப்குமார் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றினார்.
சுகாதாரத் துறை உதவி இயக்குநர் (புள்ளியியல்) டாக்டர் கரோலின், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரேம்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பிறப்புச் சான்றிதழின் அவசியம், பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கான வழி முறை கள், பெயர்இல்லாத சான்றிதழ்களில் பெயரைப் பதிவு செய்வதற்கான வழிமுறைகள் ஆகியன குறித்தும் சுகாதாரத்தின் அவசியம் குறித்தும் விழிப் பணர்வு உரையாற்றினர். இந்த விழிப்புணர்வு நிகழ் ச்சியில் கல்லூரி பேராசிரி யர்கள், விரிவுரையாளர் கள், மாணவ,மாணவியர், அலுவலர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். முன்னதாக கணினி அறிவி யல் துறைத் தலைவர் சகாயராஜ் வரவேற்றார். முடிவில் தாவரவியல் துறைத் தலைவர் (பொ) ராமராஜ் நன்றி கூறினார்.
The post வேப்பந்தட்டை அரசு கல்லூரியில் பிறப்பு, இறப்பு பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி appeared first on Dinakaran.