வேதாரண்யம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

வேதாரண்யம்,ஏப்.7: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புஷ்பவனம் ஊராட்சி அழகு கவுண்டர் தெருவில் உள்ள பெருமாள் குளத்தில் ரூ.9.90 லட்சம் மதிப்பீட்டிலும் தேத்தாக்குடி தெற்கு ஊராட்சி தெற்குவெளியில் உள்ள மாங்குளத்தில் ரூ.9.43 லட்சம் மதிப்பீட்டிலும் ஆதனூர் ஊராட்சி அண்டர்காடு கிரமத்தில் உள்ள அய்யர்வீட்டு குளத்தில் ரூ.8.65 லட்சம் மதிப்பீட்டிலும் ஆயக்காரன்புலம் 4 ஊராட்சி திம்மநாயக்கன்குத்தகை கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் குளத்தில் ரூ.8.95 லட்சம் மதிப்பீட்டிலும் சீரமைக்கப்படுகிறது. தகட்டூர் ஊராட்சி சுப்ரமணியன்காடு கிராமத்தில் உள்ள வெட்டு குளத்தில் ரூ.9.98 லட்சம் மதிப்பீட்டிலும் புனரமைப்பு சுற்றுச்சுவர் மற்றும் படித்துறை கட்டும் பணிகள் மற்றும் கடினல்வயல் ஊராட்சியில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

புஷ்பவனம் ஊராட்சியில் உள்ள அய்யனார் கோவில் தெரு சாலையை தமிழ்நாடு கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.58 லட்சம் மதிப்பீட்டில் சாலை மேம்படுத்தும் பணி நடைபெறுவதையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் 15 வது மானிய நிதியின் கீழ் தேத்தாக்குடி வடக்கு ஊராட்சி மருதூர் தெற்கு ஊராட்சி மற்றும் வாய்மேடு ஊராட்சியில் தலா ரூ.42.65 லட்சம் என மொத்தம் 127.95 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி செயலாக்க கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் நெய்விளக்குஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு புதிய வகுப்பறை கட்டிடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும் கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் சேகர், வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர்களராஜூ பாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வேதாரண்யம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Related Stories: