×

வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா

கராச்சி: பாகிஸ்தானுடன் டி20 தொடரில் மோதவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் 3 பேர் மற்றும் ஒரு உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி  தலா 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 போட்டி கராச்சியில் இன்று இரவு நடைபெற உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஷெல்டன் காட்ரெல், ரோஸ்டன் சேஸ், கைல் மேயர்ஸ் மற்றும் ஒரு உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதையடுத்து அவர்கள் நால்வரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கேப்டன் போலார்டு (காயம்), ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் இல்லாத நிலையில், 3 முன்னணி வீரர்கள் கொரோனாவால் விளையாட முடியாதது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது. …

The post வெஸ்ட் இண்டீஸ் அணியில் 3 பேருக்கு கொரோனா appeared first on Dinakaran.

Tags : Corona ,West Indies ,Karachi ,T20 ,Pakistan ,Dinakaran ,
× RELATED பூரன் அதிரடி ரன் குவிப்பு: வெஸ்ட் இண்டீஸ் சாதனை வெற்றி