வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பிய தொகை ரூ.6.43 லட்சம் கோடி: உலகளவில் முதலிடம்

வாஷிங்டன்:  உலக அளவில் பல்வேறு நாடுகளில் வசிக்கும் மக்கள், தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை சொந்த நாட்டில் உள்ள குடும்பத்தினர், உறவினர்களுக்கு அனுப்பி வருகின்றனர். அரபு நாடுகள், அமெரிக்கா, லண்டன் உட்பட வேலைக்காக வெளிநாடுகளுக்கு சென்று வசிப்பவர்களில் இந்தியர்கள் அதிகம். இந்த ஆண்டில், வெளிநாடு வாழ் இந்தியர்கள், தாய்நாட்டில் உள்ள தங்கள் குடும்பத்தினர், உறவினர்களுக்கு 8,700 கோடி டாலர் அனுப்பியுள்ளனர். இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.6.43 லட்சம் கோடி. இந்தியாவை தொடர்ந்து, சீனா, மெக்சிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து நாடுகளுக்கு டாலர்களில் அதிகமான பணம் அனுப்பப்பட்டுள்ளது. இந்தியர்கள் அனுப்பிய மொத்த தொகையில், சுமார் 20 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது. இந்த ஆண்டு அனுப்பிய தொகை, முந்தைய ஆண்டை விட சுமார் 4.6 சதவீதம் அதிகம். கொரோனா பாதிப்பு அதிகம் என்பதால், ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்குவது, மருத்துவ செலவினங்கள் உள்ளிட்ட காரணங்களால் அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளது. …

The post வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாய் நாட்டுக்கு அனுப்பிய தொகை ரூ.6.43 லட்சம் கோடி: உலகளவில் முதலிடம் appeared first on Dinakaran.

Related Stories: