வீட்டில் இருந்து வேலை 1 கல்லில் 2 மாங்காய் அடிக்கும் ஊழியர்கள்: ஐடி நிறுவனங்கள் எச்சரிக்கை

பெங்களூரு: ஐடி ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த, ‘ஒர்க் பிரம் ஹோம்’ சலுகையை முன்னணி ஐடி நிறுவனங்கள் ரத்து செய்துள்ளன. மேலும், இரட்டை வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா காலகட்டத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலைபார்க்க அனுமதி வழங்கியது. மேலும், பெங்களூருவில் மழை வெள்ளம் ஏற்பட்டு வெளிவட்ட சாலைகள் தீவுகளாக மாறியதால் ஐடி நிறுவனங்கள் அனைத்துமே ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி வழங்கியது. ஆனால், இந்த வாய்ப்பை முறைகேடாக பயன்படுத்தும் ஐடி ஊழியர்கள், வீட்டில் இருந்தபடி வேறு நிறுவனங்களுக்கும் வேலை பார்த்து வந்தனர். மேலும், ஒரு நிறுவனத்தின் திட்டத்தை மற்றொரு நிறுவனத்துக்கும் பகிர்ந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், உஷாரான இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள், தங்கள் ஊழியர்களுக்கு அளித்துள்ள. ‘ஒர்க் பிரம் ஹோம்’ சலுகையை ரத்து செய்துள்ளன. மேலும், 2 நிறுவனங்களில் வேலை பார்ப்பது, நிறுவன திட்டத்தை குறித்து அந்த நிறுவனத்துடன் ஆலோசனை நடத்துவது ஆகியன குறித்து தெரிய வந்தால் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தனது ஊழியர்களுக்கு கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது….

The post வீட்டில் இருந்து வேலை 1 கல்லில் 2 மாங்காய் அடிக்கும் ஊழியர்கள்: ஐடி நிறுவனங்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: