பொள்ளாச்சி, ஜூலை 22: பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டில் வாரத்தில் வாரந்தோறும் ஞாயிற்று கிழமை வாழைத்தார் ஏலம் நடைபெற்று வருகிறது. இதற்கு சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, வெளி மாவட்ட பகுதியிலிருந்தும் பல வகையான வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. கடந்த சில வாரமாக புதுகோட்டை, திருச்சி உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து வாழைத்தார்களின் வரத்து ஓரளவு இருந்தது. அந்நேரத்தில் உள்ளூர் வியாபாரிகள் வருகை குறைவாக இருந்தாலும், கேரள மாநில வியாபாரிகள் வருகையால் எடை மூலம் ஏலம் விறுவிறுப்புடன் நடைபெற்றது.
நேற்று நடந்த ஏலநாளின்போது, தொடர்ந்து பெய்த மழைக்காரணமாக வெளியூர் வாழைத்தார்களே விற்பனைக்காக ஓரளவு வந்துள்ளது. இருப்பினும், ஆடி மாதம் துவக்கத்தால், கோயில் விஷேச நாட்கள் அடுத்தடுத்து இருக்கும் என்பதால், கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. இதில் செவ்வாழைத்தார் ஒருகிலோ அதிகபட்சமாக ரூ.70வரையிலும், மோரீஸ் ரூ.38 வரையிலும், கேரள ரஸ்தாளி ரூ.52 வரையிலும், பூவன் ரூ.45 வரையிலும், நேந்திரன் ரூ.45 வரையிலும் என தரத்திற்கேற்றார்போல் கூடுதல் விலைக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post வாழைத்தார் வரத்து குறைவால் கூடுதல் விலைக்கு விற்பனை appeared first on Dinakaran.