செண்பகத்தோப்பு வனப்பகுதி மாந்தோப்புகளில் ஒற்றையானை அட்டகாசம்

திருவில்லிபுத்தூர் : திருவில்லிபுத்தூர் அருகே, செண்பகத்தோப்பு வனப்பகுதி மாந்தோப்புகளில் ஒற்றையானை கிளைகளை ஒடித்து நாசம் செய்வதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர். திருவில்லிபுத்தூர் அருகே, செண்பத்தோப்பு வனப்பகுதியில் மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. இந்த பகுதியில் ஒற்றையானை நடமாடி வருகிறது. சீசன் நேரத்தில் மாந்தோப்புகளில் பழம் மற்றும் காய்களை சேதப்படுத்தியது. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டது. தற்போது சீசன் முடிந்த நிலையில், மாந்தோப்புகளுக்குள் புகும் ஒற்றை யானை கிளைகளை ஒடித்து நாசம் செய்வதாக கூறப்படுகிறது. இதனால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

இது குறித்து மம்சாபுரம் விவசாயி சுப்பிரமணியன் (52) கூறுகையில், ‘எனது தோப்பிற்குள் கடந்த வாரம் புகுந்த ஒற்றையானை மாம்பழங்கள் வைத்திருந்த குடிசையைப் பிய்த்து எறிந்தது. மேலும், அதில் வைத்திருந்த மாம்பழங்களை சாப்பிட்டது. இந்நிலையில், நேற்று அதிகாலை மீண்டும் எனது தோப்பிற்கு ஒற்றையானை வந்தது. தற்போது சீசன் முடிந்த நிலையில், மாம்பழங்கள் கிடைக்காததால், மரத்தின் கிளைகளை ஒடித்து வீசியது.  இது குறித்து திருவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளேன். ஒற்றையானையின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும்’ என்றார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: