வாகன சோதனையில் பிடிபட்ட நபர்: போலீஸ் விசாரணையில் சந்தேக மரணம்: போலீசிடம் விசாரணை

சென்னை: சென்னையில் வாகன சோதனையில் பிடிபட்ட நபர் சந்தேக மரணம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னல் அருகே நேற்று இரவு தலைமைச்செயலக போலீசார் வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தார்கள் அப்போது அங்கு வந்த ஆட்டோவை சோதனை செய்தபோது அந்த ஆட்டோவில் கத்தி ஒன்றும் 2 கிலோ கஞ்சாவும் இருந்தது தெரியவந்தது.  ஆட்டோவை பறிமுதல் செய்த போலீசார் ஆட்டோவில் வந்த இரண்டு பேரை அயனாவரம் காவல்துறைக்கு கொண்டு சென்று விசாரனை நடத்தினார்கள். விசாரணையில் பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ் மற்றும் திருவல்லிக்கேனியை சேர்ந்த சுரேஷ் என்றும் தெரியவந்தது. இந்த இரண்டு பேர் மீதும் மெரினா காவல்நிலையத்தில் 2 வழக்குக்குள் இருப்பது தெரியவந்தது. நேற்று இரவு முழுவதும் அயனாவரம் காவல்நிலையத்தில் விசாரணை நடத்தினார்கள். அதன் பிறகு இன்று காலை தலைமை செயலககாலனி காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்திய போது திடீரெனெ விக்னேஷிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவரை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்தார்கள். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து துறை ரீதியாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இணை ஆணையர் பிரபாகர் நேரடியாக வந்து சம்பவ இடத்திற்கு வந்து காவலர்களிடம் விசாரனை நடத்தபட்டு வருகிறார். முதற்கட்ட விசாரணையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டதால் தான் மருத்துவமனையில் அனுமதித்தோம் என்று விசாரணையில் தெரியவந்தது…

The post வாகன சோதனையில் பிடிபட்ட நபர்: போலீஸ் விசாரணையில் சந்தேக மரணம்: போலீசிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: