சென்னை: கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிற 10, 11ம் தேதி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய செல்கிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் தொழில் வளர்ச்சி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று நேரில் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி, மதுரை, திருநெல்வேலி, கோவை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடந்த மாதம் சென்று வந்தார்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி 10, 11ம் தேதி பயணம்
