ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க சோதனை

 

கோவை, ஆக.19: கோவை மாவட்டத்தில் வாளையார், வேலந்தாவளம், சொக்கனூர், ஆனைகட்டி, மீனாட்சிபுரம், கோவிந்தபுரம், நடுப்புணி, கோபாலபுரம், கோபநாரி உட்பட 13 செக்போஸ்ட்கள் இருக்கிறது. மாவட்ட, மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த செக்போஸ்ட் வழியாக கேரள மாநிலத்திற்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் வாகனங்கள் அதிகளவு சென்று வருகிறது. கடத்தல் வாகனங்கள், ஹவாலா, போதை பொருட்கள், ரேசன் அரிசி, கஞ்சா, ஸ்பிரிட், தடை செய்யப்பட்ட பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள் செக்போஸ்ட் வழியாக எல்லை தாண்டி செல்வதாக புகார் எழுந்துள்ளது.

மாவட்ட போலீசார் சோதனையில் தப்பி கடத்தல் வாகனங்கள் செல்வதை தடுக்க, கண்காணித்து கண்டறிய சில இடங்களில் வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வணிக வரித்துறையின் கண்காணிப்பு கேமராக்கள் இருக்கிறது. இந்த கேமராக்கள் அலுவலக வளாகத்தில் மட்டுமே இருப்பதால் முறையாக வாகனங்களை கண்காணிக்க முடிவதில்லை. இதை தவிர்க்க, அனைத்து வாகனங்களையும் மாவட்ட போலீஸ் கட்டுபாட்டு அறையில் கண்காணிக்க கேமராக்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

முக்கிய செக்போஸ்ட்களில் இந்த கேமராக்கள் ெபாருத்தப்பட்டு கண்காணிக்க வசதி செய்யப்பட்டு வருகிறது. மதுக்கரை நீலம்பூர் பைபாஸ் ரோடு, ஆனைக்கட்டி ரோடு, வேலந்தாவளம் ரோடு உள்ளிட்ட முக்கிய மாவட்ட, மாநில எல்லை ரோட்டில் வாகனங்களின் விதிமுறை மீறல்களை கண்டறிய பல்வேறு இடங்களில் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் தனியார் உதவியுடன் பெற்று கண்காணிக்கும் பணியும் நடக்கிறது.

The post ரேஷன் அரிசி கடத்தல் தடுக்க சோதனை appeared first on Dinakaran.

Related Stories: