காவிரி விவகாரம் : இடைக்கால உத்தரவு திருப்தி அளிக்கவில்லை என கூறி தமிழக விவசாயிகள் டெல்லியில் போராட்டம்

டெல்லி : காவிரி விவகாரம் தொடர்பாக மத்திய அரசை கண்டித்து உச்சநீதிமன்ற வளாகத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் இந்த மாதம் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்ற தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். மேலும் 100 டி.எம்.சி தண்ணீர் வந்தால் தான் ஜூனில் பயிர் செய்ய முடியும் என்றும்  தமிழக விவசாயிகள் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்ற இடைக்கால உத்தரவு திருப்தி அளிக்கவில்லை என கூறி தமிழக விவசாயிகள் உச்சநீதிமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  உச்சநீதிமன்ற வளாகத்தில் இருக்கக் கூடிய மரத்தில் ஏறி நின்று தமிழக விவசாயிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களோடு அங்கிருந்த காவல்துறையினர் தொடர்ச்சியாக வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டதை தடுக்க முயன்ற காவல்துறையினருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.   இதனிடையே உச்சநீதிமன்றத்தில் பல உத்தரவுகளை கர்நாடக அரசு செயல்படுத்தியது இல்லை என்று குற்றம் சாட்டிய தமிழக விவசாயிகள் , உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் நாடகம் நடத்தி வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: