ராமேஸ்வரத்தில் 572 மதுபாட்டில்கள் பறிமுதல்: வாலிபர் கைது

 

ராமேஸ்வரம், செப். 16: ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சவுந்தரியம்மன் கோயில் தெருவிலுள்ள கேஸ் குடோன் அருகில் சாலையில் நகர் காவல்நிலைய ஆய்வாளர் கோட்டைச்சாமி தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பல்சர் இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் இருசக்கர வாகனத்தில் கடத்திவரப்பட்ட 572 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர்.

விசாரணையில் சட்டத்திற்கு புறம்பாக கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்கு மது பாட்டில்கள் கடத்தியது தெரியவந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் ராமேஸ்வரம் ராஜகோபால் நகர் பகுதியை சேர்ந்த அருள் மணிகண்டன் (21) என்பவரை கைது செய்தனர்.தப்பியோடிய கரையூர் வேர்கோடு பகுதியை சேர்ந்த குமரகுரு(29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ராமேஸ்வரத்தில் 572 மதுபாட்டில்கள் பறிமுதல்: வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: