ரஷ்யாவில் பேஸ்புக்குக்கு தடை

கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிராக சர்வதேச நாடுகளும் கடும் விமர்சனங்களை முன்வைக்கின்றன. புடினுக்கு எதிராக அவரது நாட்டிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மேற்கத்திய நாடுகள் தமக்கு எதிராக பிரசாரம் செய்வதாக புடின் குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் ரஷ்யாவில் நேற்றிரவு முதல் பேஸ்புக் நிறுவனத்திற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. ரஷ்யாவுக்கு எதிராக பிரசாரம் செய்து வருவதால், அந்நிறுவனத்திற்கு எதிராக ஊடக ஒழுங்குமுறை சட்ட்ததின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து ரஷ்யாவின் தணிக்கை நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘பேஸ்புக் நிறுவனம் ரஷ்யாவுக்கு எதிராக பாரபட்சமாக நடந்து கொள்கிறது. கூட்டாட்சி சட்டத்தை மீறிய செயலாக ரஷ்ய அரசு கருதுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைவர் நிக் கிளெக் கூறுகையில், ‘ரஷ்யாவில் எங்களது சேவையை மீட்டெடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். மில்லியன் கணக்கான மக்களின் நம்பகமான தளத்தில் இருந்து வெளியேற்றப்படுவது சரியல்ல; அவர்களின் குடும்பம் மற்றும் நண்பர்களுடனான தொடர்பில் இருந்து அவர்கள் விலகியிருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது’ என்று கூறினார். ஏற்னவே, ரஷ்ய செய்தி சேனல்களான ஆர்டி மற்றும் ஸ்புட்னிக் ஆகியவற்றை பேஸ்புக் நிறுவனம் தடை செய்தது. இதற்கு பதிலடியாக தற்போது பேஸ்புக் மீது ரஷ்யா தடைவிதித்துள்ளதுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதள ஊடகங்கள் மீதும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. …

The post ரஷ்யாவில் பேஸ்புக்குக்கு தடை appeared first on Dinakaran.

Related Stories: