ரகாரன் கோயிலில் கும்பாபிஷேக விழா

மல்லசமுத்திரம், ஜூன் 17: கொன்னையார் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீரகாரன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. எலச்சிபாளையம் அடுத்த கொன்னையார் கிராமத்தில் புடவைகாரியம்மன், நாகம்மாள், எல்லம்மாள், லிங்கம்மாள், கன்னிமார், வீரகாரன் சுவாமிகளுக்கு புதிதாக கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலில் நேற்று முன்தினம் தீர்த்த குடம், முளைப்பாரி அழைத்துக்கொண்டு புடவைகாரியம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது. மாலை கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், முதற்கால ஹோம பூஜை நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு சாந்தி பூஜை, இரண்டாம் காலயாக பூஜை, நாடி சந்தானம் நடந்தது. காலை 9 மணிமுதல் 10.30மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அபிஷேகம், கோ பூஜை, தீபாராதனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post ரகாரன் கோயிலில் கும்பாபிஷேக விழா appeared first on Dinakaran.

Related Stories: