சென்னை: சென்னை அசோக் நகர் பகுதியில் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி உள்ளது. இங்கு தினமும் காலை 9 மணி முதல் 9.30 மணி வரை இறைவணக்கம் செய்வது வழக்கம். அதன்படி நேற்று காலை பள்ளி மைதானத்தில் இறைவணக்கம் நடைபெற்றது. அப்போது மைதானத்தில் இருந்த மரத்தின் கிளை ஒன்று திடீரென முறிந்து 11ம் வகுப்பு அறிவியல் பிரிவில் படித்து வரும் 7 மாணவிகள் மீது விழுந்தது. இதை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். உடனே அங்கு பணியில் இருந்த ஆசிரியர்கள் மரம் விழுந்து காயமடைந்த 7 மாணவிகளை மீட்டு கே.கே.நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதல் உதவி கிகிச்சை அளித்தனர். நல்வாய்ப்பாக அவர்களுக்கு ரத்த காயங்கள் எதுவும் ஏற்பட வில்லை. இருப்பினும் தலையில் ஏதேனும் பாதிப்பு உள்ளதா என கண்டறிய 7 மாணவிகளுக்கு ஸ்கேன் எடுக்க டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அதை தொடர்ந்து 7 மாணவிகளுக்கும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதுகுறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது….
The post மைதானத்தில் இறைவணக்கம் செய்தபோது மாணவிகள் மீது மரக்கிளை முறிந்து விழுந்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.