ஆரணி: ஆரணி அருகே பயணிகள் நிழற்கூடத்தில் ஆதரவற்று தங்கியிருந்த மூதாட்டியை ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த இரும்பேடு பகுதியில் பயன்பாடின்றி உள்ள பயணிகள் நிழற்கூடத்தில், கடந்த 3 மாதங்களாக 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ஆதரவற்ற நிலையில் தங்கியிருந்தார். உணவு மற்றும் உடுத்த உடையில்லாமல் அவதிப்பட்டு வந்ததையறிந்த அப்பகுதி மக்கள் அவருக்கு தினமும் உணவு, தண்ணீர், டீ போன்றவற்றை கொடுத்து வந்தனர். இந்நிலையில், இந்த மூதாட்டியின் நிலை குறித்து, இரும்பேடு ஊராட்சி தலைவர் தரணி வெங்கட்ராமன் பிடிஓ மூர்த்திக்கு நேற்று தகவல் தெரிவித்தார். பின்னர் பிடிஓ, ஆரணிக்கு வந்த மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலர் ஜெயசுதாவிடம் மூதாட்டி குறித்து தெரிவித்தார்.
பயணிகள் நிழற்கூடத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற மூதாட்டி காப்பகத்தில் ஒப்படைப்பு : அதிகாரிகள் நடவடிக்கை
