கண்டுக்காதீங்க... ப்ளீஸ்..!

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொழுதுபோக்கு கிளப்புகள் 28ல் பெரும்பாலானவை காவல்துறை விதிகளை மீறி செயல்படுகிறது. ஆனால், இவற்றை போலீசார் கண்டுகொள்வதில்லை.காரணம், மாதம் தோறும் அந்தந்த  பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்கள் மற்றும் ஆளும்கட்சியைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளை கிளப் உரிமையாளர்கள் வலுவாக கவனித்து விடுகின்றனர்.இந்நிலையில், ஈரோடு மாவட்ட புதிய எஸ்.பி.யாக பொறுப்பேற்றுள்ள சக்திகணேசன், விதிமுறை மீறும் கிளப்புகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். போலீஸ் பிடி திடீரென இறுகியதால், கிளப்புகளில் ும்பாலான கிளப் வெறிச்சோடி கிடக்கிறது. இது, காவல்துறை உள்ளிட்ட ஆளும்கட்சி முக்கிய பிரமுகர்களுக்கும் வருவாய் இழப்பை ஏற்படுத்திவிட்டது.

இதனால், வெட, வெடத்துப்போன சில காக்கிகள், ஆளும்கட்சி முக்கிய  புள்ளிகளை தூண்டிவிட்டு, ஈரோடு எஸ்.பி.யிடம் பேச வைத்தனர். அவர்கள், ‘’கிளப்புகளை கொஞ்சம் கண்டுக்காதீங்க... ப்ளீஸ்... என எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வெளிப்படையாக இப்படி கூறியதை கேட்டு  அவர், அதிர்ந்துபோய்விட்டார். கப்பம் கட்டும் கிளப்புகள் எவை? மாமூல் பெறும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஆளும்கட்சி புள்ளி யார்? என லிஸ்ட் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், உள்ளதும் போச்சுடா நொள்ள கண்ணா...  என போலீஸ் அதிகாரிகள் புலம்புகின்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: