×

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு: இன்று நடக்கிறது

சென்னை: தமிழகத்தில் அரசு மேனிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள், உடற்கல்வி  இயக்குநர் கிரேடு-1, கணினி பயிற்றுநர்கள் கிரேடு-1 பணியிடங்களில் 1960 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இத்துடன் ஏற்கனவே காலியாக உள்ள 247 இடங்களையும் நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்து அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு தற்போது போட்டித் தேர்வு இன்று நடக்க உள்ளது. இந்த தேர்வில் பங்குபெறும் முதுநிலை பட்டதாரிகளில் 40 வயதை தாண்டிய இட ஒதுக்கீட்டுப் பிரிவினரும் 45 வயதை தாண்டிய பிசி, பிசி முஸ்லிம், எம்பிசி, எஸ்சி, எஸ்டி அருந்ததியர் எஸ்டி ஆகியோர் முதுநிலை ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாது என்று கடந்த ஆட்சியில் தெரிவிக்கப்பட்டது. தற்போதைய திமுக அரசு பொதுப் பிரிவினருக்கான வயது வரம்பு 40ல் இருந்து 45 ஆகவும், இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 45ல் இருந்து 50 ஆகவும் உயர்த்தியது. நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பு 1.1.2023 முதல் பொதுப்பிரிவினருக்கு 42, இதர பிரிவினருக்கு 47 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மேற்கண்ட போட்டித் தேர்வு இன்று தொடங்கி 20ம் தேதி வரை நடக்க உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் 19ம் தேதி மட்டும் தேர்வு இல்லை. இந்த தேர்வுகள் காலை, மதியம் என இரண்டு கட்டமாக நடக்கிறது. தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தவர்களுக்கான ஹால்டிக்கெட்டுகள் அனைத்தும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டு, பதிவிறக்கம் செய்துகொள்ள ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து  இருந்தது. அதன்படி, இணைய தளத்தில் இருந்து ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த தேர்வர்களுக்கு சில கடுமையான கட்டுப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அது வருமாறு: * தேர்வு எழுத வருவோர் இரண்டு முறை தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஒரு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசிக்கான காலக்கெடு முடிந்திருக்க கூடாது. * தடுப்பூசி போடாதவர்கள் தேர்வு நேரத்துக்கு 72 மணி நேரத்துக்கு முன்னதாக ஆர்டிபிசிஆர் சோதனை செய்திருக்க வேண்டும். அதற்கான சான்றையும் எடுத்து வர வேண்டும். * இதற்காக தேர்வர்கள் 1.30 மணி நேரம் முன்னதாக முதல் ஷிப்ட்டுக்கு 7.30 மணிக்கும், 2வது ஷிப்ட்டுக்கு  12.30 மணிக்கும்  வர வேண்டும். * தேர்வு எழுத வருவோர் ஹால்டிக்கெட்டுடன் போட்டோவும் எடுத்து வர வேண்டும். அத்துடன் ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு மற்றும் பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அசல் ஆவணங்களில் ஏதாவது ஒன்றை  எடுத்து வர வேண்டும். * தேர்வு எழுத வருவோர் நகைகள் அணிந்து வரக்கூடாது. பெல்ட் அணியக் கூடாது, ஹைஹீல்ஸ் செருப்பு அணிந்து வரக்கூடாது, சாதாரண செருப்பு மட்டுமே அணிந்து வர வேண்டும். *  பேப்பர், பேனா மற்றும் பென்சில் ஆகியவை தேர்வுக் கூடத்தில் வழங்கப்படும். * ஹால்டிக்கெட்டுகள் தேர்வுக் கூட அலுவலர் பெற்று தாங்களே வைத்துக் கொள்வார்கள். அதனால் அதை நகல் எடுத்துக் கொள்ள வேண்டும். …

The post முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு போட்டித்தேர்வு: இன்று நடக்கிறது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu ,
× RELATED தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய...