- திருவொற்றியூர்
- சென்னை கார்ப்பரேஷன்
- மணாலி மண்டலம்
- கழகம் ஆரம்பப் பள்ளி
- மணாலி
- பாராளுமன்ற உறுப்பினர்
- முல்லை ராஜசேகர்
- ஆறுமுகம்
திருவொற்றியூர்: சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய ஒருநாள் வேலை வாய்ப்பு முகாம் மணலியில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் நடைபெற்றது. இதில் மாமன்ற உறுப்பினர் முல்லை ராஜசேகர் தலைமை வகித்தார். குழுத்தலைவர் ஆறுமுகம் முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும், ஐடிஐ படித்தவர்களும் என 150க்கும் மேற்பட்ட இளம்பெண், இளைஞர்கள் பங்கேற்றனர்.
இவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதில் மணலியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிய 80 பேருக்கு பணி நியமன ஆணையை தலைவர் ஏ.வி.ஆறுமுகம், மண்டல உதவி ஆணையர் கோவிந்தராசு, செயற் பொறியாளர் தேவேந்திரன் ஆகியோர் வழங்கினர். முகாமில் கவுன்சிலர்கள் ஸ்ரீதர், ஜெய்சங்கர் மற்றும் நிறுவன அதிகாரிகள் மகாதேவன், மலர்விழி மற்றும் கிராம நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
The post வேலை வாய்ப்பு முகாம் 80 பேருக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.