×

குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலத்தை கடித்து குதறிய தெருநாய்கள்

தண்டையார்பேட்டை, அக்.9: கொருக்குப்பேட்டை ரங்கநாதபுரம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 600 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வசித்து வரும் ஆட்டோ டிரைவர் ஓருவர், நேற்று சவாரிக்கு புறப்பட்டபோது, அங்குள்ள குப்பை தொட்டி அருகே கிடந்த பிளாஸ்டிக் பையை தெருநாய்கள் கடித்து குதறிக்ெகாண்டு இருந்தன. சந்தேகத்தின் பேரில் அருகில் சென்று பார்த்தபோது, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை சடலம் பிளாஸ்டிக் பையில் இருப்பதும், அதை தெரு நாய்கள் கடித்து குதறியதும் தெரிந்தது. உடனே, தெரு நாய்களை விரட்டிவிட்டு, இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், கொருக்குப்பேட்டை போலீசார் விரைந்து வந்து, குழந்தை சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து, குழந்தை சடலத்தை வீசி சென்ற நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

The post குப்பை தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை சடலத்தை கடித்து குதறிய தெருநாய்கள் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet ,Ranganathapuram Urban Habitat Development Board ,Korukuppet ,
× RELATED மணமகன் தன்னுடன் குடித்தனம்...