- முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள்
- கரூர்
- முதலமைச்சர் கோப்பை
- கரூர் மாவட்டம்
- கலெக்டர்
- தங்கவேல்
- மாவட்டம்
- தமிழ்
- நாடு முதல்வர் கோப்பை விளையாட்டு 2024-2025
- முதல்வர் கோப்பை விளையாட்டு
- தின மலர்
கரூர்,ஆக.14: கரூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி 5 பிரிவுகளில் நடக்கிறது. இதற்கான விண்ணப்பிக்க வரும் 25ம்தேதி கடைசி நாளாகும் என்று கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். கரூர் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-2025 ஆண்டிற்கு நடத்துவது குறித்து கரூர் கலெக்டர் தங்கவேல் தலைமையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான அமைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
அப்போது கலெக்டர் தங்கவேல் தெரிவித்ததாவது: தமிழ்நாடு விளையா ட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக, பள்ளி, கல்லூரி, பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் 27 விளையா ட்டுக்கள் 53 வகைகளில் மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடத்தப்படவுள்ளது. விளையாட்டுப் போட்டிகளை வழிகாட்டி நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட தலைமையகத்திலிருந்து அறிவுரை பெறப்பட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவில் பள்ளி மாணவ, மாணவியர்கள் (12 முதல் 19 வயது வரை) 15 விளையாட்டுக்கள். தடகளம், இறகுபந்து, கூடைபந்து, மட்டைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேசைபந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், செஸ், கோ-கோ ஆகும். மண்டல மற்றும் மாநில அளவில்-பள்ளி மாணவ, மாணவியர்கள் (12 முதல் 19 வயது வரை) 6 விளையாட்டுக்கள். டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரைகையுந்துபந்து, வாள்விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை ஆகும். நேரடி மாநில அளவில்-பள்ளி மாணவ, மாணவியர்கள் (12 முதல் 19 வயதுவரை) 2 விளையாட்டுக்கள். டிராக்சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகும். மாவட்ட மற்றும் மாநில அளவில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் (17 முதல் 25 வயது வரை) 14 விளையாட்டுக்கள். தடகளம், இறகுப்பந்து . கூடைபந்து, மட்டைபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கபாடி, சிலம்பம், நீச்சல், மேசைப்பந்து, கையுந்துபந்து, கைப்பந்து, கேரம், செஸ் ஆகும்.
மண்டல மற்றும் மாநில அளவில் – கல்லூரி மாணவ, மாணவியர்கள் (17 முதல் 25 வயது வரை) 6 விளையாட்டுக்கள். டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்து பந்து, வாள்விளையாட்டு, ஜூடோ, குத்துச்சண்டை ஆகும். மேலும் நேரடி மாநில அளவில் – கல்லூரி மாணவ, மாணவியர்கள் (17 முதல் 25 வயதுவரை) 2 விளையாட்டுக்கள். டிராக் சைக்கிளிங், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகும். மாவட்ட அளவில் – பொதுப்பிரிவு (15 முதல் 35 வயதுவரை) ஆண்கள், பெண்கள் 6 விளையாட்டுக்கள். தடகளம், மட்டைப்பந்து, கையுந்துபந்து, கால்பந்து, கேரம், சிலம்பம் ஆகும். மாவட்ட மற்றும் மாநில அளவில் – பொதுப்பிரிவு (15 முதல் 35 வயதுவரை) ஆண்கள், பெண்கள்- 2 விளையாட்டுக்கள், இறகுப்பந்து, கபாடி ஆகும். மாவட்ட அளவில் – அரசு ஊழியர் (வயது வரம்பு இல்லை) ஆண்கள், பெண்கள்- 4 விளையாட்டுக்கள். தடகளம், செஸ், கபாடி, கையுந்துபந்து ஆகும்.
மாவட்ட மற்றும் மாநில அளவில் – அரசு ஊழியர் (வயது வரம்பு இல்லை) ஆண்கள், பெண்கள் 2 விளையாட்டுக்கள். இறகுப்பந்து, கேரம் ஆகும். மாவட்ட மற்றும் மாநில அளவிலான மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் (வயது வரம்பு இல்லை) ஆண்கள், பெண்கள்-4 விளையாட்டுக்கள். உடல் ஊனமுற்றோர் (Physically Challenged) – தடகளம், இறகுப்பந்து, சக்கர நாற்காலி மேசைப்பந்து. பார்வைத்திறன் மாற்றுத்திறனாளி (Visually Challenged) – தடகளம், Adapted Volleyball (7 Players), மனவளர்ச்சி குன்றியோர் (Mentally Challenged) – தடகளம், Throw ball (7 Players), செவித்திறன் மாற்றுத்திறனாளி (Hearing Impaired) – தடகளம், கபாடி (7 Players). நேரடி மாநிலஅளவில் -மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் (வயது வரம்பு இல்லை) ஆண்கள், பெண்கள்- 1 விளையாட்டு. பெரு மூளைவாதம் (Celebral Palsy) – தடகளம், கால்பந்து(7 Players) ஆகும்.
ஒரு விளையாட்டு வீரர் ஒரே ஒரு விளையாட்டில் மட்டுமே பங்கேற்கமுடியும். தனிநபர் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு விளையாட்டுவீரர் இரண்டு பிரிவுகளில் பங்கேற்கமுடியும். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் www.sdat.tn.gov.in வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் வரும் 25ம்தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். 2024-ம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை அனைத்து நடைமுறைகள் மற்றும் விதிகளை பின்பற்றி பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து சிறப்பாக நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவ ட்ட விளையாட்டு அலுவலர் கோகிலா, மாநகராட்சி ஆணையர் சுதா, மாவட்ட அளவிலான இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மற்றும் மாவட்ட அளவிலான அங்கிகரிக்கப்பட்ட விளையாட்டு சங்கத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி appeared first on Dinakaran.