×

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டு

ராஜபாளையம், நவ.6: முதலமைச்சர் கோப்பை போட்டியில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை போட்டி மாற்றுத்திறனாளிகள் பிரிவில் ராஜபாளையம் சிறப்பு பள்ளி மாணவி அமலா மாநில அளவில் வெற்றி பெற்றார். இவர் மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவியை கலெக்டர் ஜெயசீலன் நேரில் அழைத்து பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் குமர மணிமாறன், சிறப்புப் பள்ளி ஆசிரியர்கள் ஆசியா பெனசீர் மற்றும் பிலோமினாள் கலந்து கொண்டனர்.

The post முதலமைச்சர் கோப்பை போட்டியில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chief Minister's Cup ,Rajapalayam ,Amala ,Rajapalayam Special School ,Tamil Nadu Chief Minister's Cup ,Dinakaran ,
× RELATED தென்காசி கபடி போட்டியில் சங்கரன்கோவில் அணி வெற்றி