×

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம்: மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார்

கரூர், நவ. 5: மக்கள் குறை தீர் கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ. 5034 மதிப்பிலான தையல் இயந்திரத்தை மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார். கருர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பல்வேறு பயனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோரிக்கை மனுக்களுடன் வந்து, மாவட்ட கலெக்டரிடம் மனுக்களை வந்து, கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருகின்றனர். இந்த குறைதீர் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் முதல் அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைக மனுக்களும், கனிவுடன் பெறப்பட்டு, துறை அதிகாரிகளிடம் வழங்கி, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவுகளை வழங்கி வருகிறார். இதனடிப்படையில், அனைத்து தரப்பு மக்களும் நம்பிக்கையுடன் வந்து இந்த குறைதீர் நாள் கூட்டத்தில் மனுக்களை அளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனடிப்படையில், நேற்று கருர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், ஒய்வூதியம், வங்கி கடன், இலவச வீட்டு மனைப்பட்டா, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை மற்றும் இதர மனுக்கள் போன்றவைகளை கேட்டு மொத்தம் 248 மனுக்கள் பெறப்பட்டது. இதில், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து 26 மனுக்கள் பெறப்பட்டது. மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கு என பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமர வைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று, கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு நேற்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்திற்குள் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில், மனு அளிக்கப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு ரூ. 5034 மதிப்பிலான தையல் இயந்திரத்தை மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், குளித்தலை சார் ஆட்சியர் ஸ்வாதி, திட்ட இயக்குநர் பாபு, கோட்டாட்சியர் முகமது பைசல், மாவட்ட வழங்கல் அலுவலர் சுரேஷ், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மோகன்ராஜ் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

The post பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம்: மாவட்ட கலெக்டர் தங்கவேல் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Backward Welfare Department ,District Collector ,Thangavel ,Karur ,Backward Persons Welfare Department ,People's Grievance Day ,Karur District Collector ,Dinakaran ,
× RELATED கனமழை எதிரொலியாக திருச்செந்தூர்...