×

அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வேலாயுதம்பாளையம் அருகே தொட்டிக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

 

வேலாயுதம்பாளையம், நவ.6: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே ஆதி ரெட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (70). விவசாயி. இவர் ஆடு, மாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் தங்கவேல் வீட்டில் கட்டி வைத்திருந்த பசுமாட்டை அவிழ்த்து மேய்ப்பதற்காக விட்டிருந்தார். அப்போது அந்தப் பகுதியில் அஞ்சு அடி அகலம் உள்ள தண்ணீர் தொட்டி ஒன்று திறந்த நிலையில் இருந்துள்ளது.

தண்ணீர் தொட்டி அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு, திடீரென தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. தொட்டியில் இருந்து பசு மாட்டால் வெளியேற முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று வந்து தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை கயிற்றின் மூலம் கட்டி உயிருடன் மீட்டு மாட்டின் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

The post அகற்ற பொதுமக்கள் கோரிக்கை வேலாயுதம்பாளையம் அருகே தொட்டிக்குள் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Velayuthampalayam ,Velayuthambalayam ,Thangavel ,Adi Reddipalayam ,Noyal ,Karur district ,
× RELATED கரூர்- சேலம் மெயின் ரோட்டில்...