×

குட்கா விற்க முயன்றவர் மீது வழக்கு

 

கரூர், அக். 29: கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவது சம்பந்தமாக, அந்தந்த காவல் நிலைய போலீசார், மதுவிலக்கு போலீசார் கடந்த சில மாதங்களாக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், மாவட்ட எஸ்பி உத்தரவின்பேரில், குட்கா பொருட்கள் விற்பனை சம்பந்தமாக தனிப்படைகளும் அமைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நேற்று முன்தினம், கரூர் மாவட்டம் தோகைமலை அடுத்துள்ள உடையாபட்டி பகுதியில் உள்ள பெட்டிக் கடையில் குட்கா பொருட்களை மறைத்து வைத்து விற்பனை செய்ய முயன்றதாக இதே பகுதியை சேர்ந்த ஒருவர் மீது டவுன் போலீசார் வழக்குப் பதிந்து, அவரிடம் இருந்து 500 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.

The post குட்கா விற்க முயன்றவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Gutka ,Karur ,Prohibition Police ,District SP Uttara ,Dinakaran ,
× RELATED நங்கவரம் அருகே 100 கிராம் குட்கா பொருட்கள் பறிமுதல்