முடி திருத்தம் கடைகளில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு

போச்சம்பள்ளி, ஆக.4: மத்தூர் பகுதியில் செயல்படும் முடி திருத்தம் கடைகளில் மாணவர் நலனில் உதவிட கோரி, ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த சுமார் 675 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்கள் ஒழுக்க நெறிமுறைகளை கடைபிடிக்கும் வகையில், ஒழுங்கீன செயலில் ஈடுபடும் மாணவர்கள், இனி வரும் காலங்களில் அவ்வாரான முடி திருத்தம் செய்யாமல், சாதாரணமான முறையில் முடி திருத்தம் செய்யும் வகையிலும், பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவுமாறு, முடி திருத்தம் செய்யும் கடை உரிமையாளர்களிடம், பள்ளி தலைமை ஆசிரியர் வாசுதேவன், உதவி ஆசிரியர்கள் சின்னதுரை, சின்னராஜ், ரவி, முருகன் ஆகியோர் விழிப்புணர்வு வாசகம் அடங்கிய நோட்டீசை வழங்கினர்.

இதே போல், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, புகை படித்தல் சம்பந்தமான எந்த பொருளும் பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யக் கூடாது அதையும் மீறியும், பள்ளி மாணவர்களுக்கு போதை பொருட்கள் விற்பனை செய்தால், இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட தண்டனை மற்றும் ரொக்க பணம் அபராதம் கட்ட நேரிடம் என மளிகை, பெட்டிக்கடை, சிறு கடைகள் உரிமையாளர்களிடம் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.

The post முடி திருத்தம் கடைகளில் ஆசிரியர்கள் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: