‘மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது’

சென்னை: பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: * தமிழ்நாட்டில் நிறுவப்பட்டுள்ள மொத்த மின் உற்பத்தித் திறன் 32,646 மெகாவாட் (சூரிய மற்றும் காற்றாலை 13,128 மெகாவாட் உட்பட) ஆக உள்ளது. இருப்பினும் உச்சபட்சமாக 16,846 மெகாவாட் மின் தேவை ஏற்படும்போது, உண்மையில் அதிகபட்சமாக 14,351 மெகாவாட் மின்சாரம் மட்டுமே கிடைக்கப்பெறுகிறது. ஏறத்தாழ 2,500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளிலிருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது. எனவே, கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாடு மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது. * தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளவாறு, சொந்த அனல் மின் உற்பத்தி நிறுவுதிறன் 4,320 மெகாவாட் மட்டுமே. அவற்றில் 2,520 மெகாவாட் மின் உற்பத்தி செய்கின்ற 12 அலகுகள் 25 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை என்பதால், விரைவில் அவை மாற்றப்பட வேண்டும். அடுத்த 10 ஆண்டுகளில், சொந்த மின் உற்பத்தி நிலையங்களின் வாயிலாக, மாநிலத்தில் 17,980 மெகாவாட் மொத்த மின் உற்பத்தித் திறன் கூடுதலாக சேர்க்கப்படும். * வேளாண்மைக்கான இலவச மின்சாரம் மற்றும் வீட்டிற்கான மின்சாரம் வழங்குவதற்கான மானியங்களுக்காகவும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இழப்புகளுக்கு நிதி வழங்கவும் ரூ.19,872.77 கோடி  ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது….

The post ‘மின்மிகை மாநிலம் என்ற கூற்று தவறானது’ appeared first on Dinakaran.

Related Stories: