×

மாவட்டம் முழுவதும் கிராம புலப்பட வரைபடங்கள் கணினி மயமாக்கும் பணி 100 சதவீதம் நிறைவு

 

ஈரோடு, அக்.4: ஈரோடு மாவட்டத்தில் கிராம புலப்பட வரைபடங்கள் கணினி மயமாக்கும் பணியானது 100 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் நத்தம் மற்றும் நகர நிலப்பதிவேடுகளின் தரவுகளை கணினியில் பதிவேற்றம் செய்தல் மற்றும் புலப்பட வரைபடங்களை கணினி மயமாக்குதல் பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணியானது தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு கணினி மயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: நிலப்பதிவேடுகள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு ஏற்ப நிலப்பதிவேடுகளின் தரவுகளை உட்புகுத்துதல் மற்றும் புலப்பட வரைபடங்களை கணினி மயமாக்கும் பணியானது நடைபெற்று வந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஈரோடு, பவானி, கோபி, சத்தி, பெருந்துறை, கொடுமுடி என மொத்தம் 10 வருவாய் வட்டங்களில் மொத்தம் 1 லட்சத்து 69 ஆயிரத்து 866 புலங்கள் உள்ளன. புலப்படங்கள் வரைதல் பணியானது முழுமையாக முடிக்கப்பட்டு விட்டது. இதையடுத்து அனைத்து கிராம புலவரைபடங்களும் இணையவழிபடுத்தப்பட்டு உட்பிரிவுகள் மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகின்றது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

The post மாவட்டம் முழுவதும் கிராம புலப்பட வரைபடங்கள் கணினி மயமாக்கும் பணி 100 சதவீதம் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,Dinakaran ,
× RELATED ஈரோடு மாவட்டம் காவிரி ஆற்றில் வெள்ளம்...