×

வனத்துறை குறைதீர் கூட்டம்

 

ஈரோடு, ஆக.5: வனத்துறை சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (6ம் தேதி) நடைபெற உள்ளது. ஈரோடு வனக்கோட்டத்தில் செயல்பட்டு வரும் வனச்சரகங்களான அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி மற்றும் ஈரோடு வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிப்பதற்கும் மற்றும் அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், மாவட்ட வன அலுவலர் தலைமையில், ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் நாளை (6ம் தேதி) காலை 11 மணியளவில் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வனத்துறை குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Andiyur ,Barkur ,Thattakkarai ,Chennampatti ,Erode forest ,
× RELATED புகையிலை பொருட்கள் கடத்திய வட மாநில வாலிபர் கைது