×

கடன் தொல்லை: ரயில்வே ஊழியர் தற்கொலை

 

ஈரோடு, ஆக.6: கடன் தொல்லையால் ரயில்வே இன்ஜினியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மூலப்பாளையம் விநாயகர் கோவில் 6வது வீதியை சேர்ந்தவர் கண்ணன் (51). இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். ஈரோடு டீசல் லோகோ ஷெட்டில் இன்ஜினியராக பணியாற்றி வந்தார். கடந்த 1ம் தேதி அலுவலகத்துக்கு வந்த கண்ணன், திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளார்.

பின்னர் ஊழியர்கள் விசாரித்தபோது கடன் தொல்லையால் விஷம் குடித்துவிட்டதாக கூறி உள்ளார். இதையடுத்து ஊழியர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று கண்ணன் இறந்தார். ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post கடன் தொல்லை: ரயில்வே ஊழியர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Kannan ,6th street ,Moolapalayam Vinayagar temple ,
× RELATED ஈரோட்டில் பூண்டு விலை தொடர்ந்து உச்சம்