மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா

கெங்கவல்லி, ஆக.15: வீரகனூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வீ.ராமநாதபுரம் கிராமத்தில் விநாயகர் மற்றும் மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. கடந்த 6ம் தேதி முகூர்த்தக்கால் நாட்டப்பட்டது. பின்னர் சக்தி அழைத்தல், 8ம் தேதி காளியம்மனுக்கு மாவிளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல், 9ம் தேதி தொட்டியத்தான், குன்றுடையான் சுவாமிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், 11ம் தேதி பொன்னாளி யம்மனுக்கு மாவிளக்கு பொங்கல் வைத்தல், 13ம் தேதி மாரியம்மனுக்கு மாவிளக்கு, பொங்கல் வழிபாடு, முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 7 மணி அளவில் உருளுதண்டம், அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்து வேண்டுதல் நிறைவேற்றினர்.

மதியம் 12 மணி அளவில், அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் வைக்கப்பட்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழாவில் வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்ஐ அந்தோணி மைக்கேல் தலைமையில் 20க்கும் மேற்பட்ட போலீசார் மேற்கொண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கெங்கவல்லி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொ) செல்லப்பாண்டியன், வேலுமணி தலைமையில் தீயணைப்பு வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

The post மாரியம்மன் கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: