பெங்களூரு: இந்தியாவிலேயே முதன் முறையாக கர்நாடக மாநில அரசின் சார்பில் நகைக்கடை தொடங்கப்படுகிறது என அமைச்சர் முருகேஷ் நிராணி கூறினார். மாநில சுரங்கம் மற்றும் கனிம துறை அமைச்சர் முருகேஷ் நிராணி நகைக்கடை சிறு வணிகர்கள் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் நிராணி கூறியதாவது: ஹட்டி கோல்டு தங்கச் சுரங்கம் ராய்ச்சூரு மாவட்டத்தில் உள்ளது. இதில் இருந்து வருடம் 1,700 கிலோ தங்கம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதை 5 ஆயிரம் கிலோ ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டு இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். தங்கத்திற்கு ஏற்பட்டுள்ள தேவையை கருத்தில் கொண்டு இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளது. அத்துடன், அரசின் சார்பில் நகைக்கடை தொடங்கவும் முடிவு செய்துள்ளோம். இந்த நகை கடையில் முதற்கட்டமாக தங்ககட்டிகள் விற்பனை செய்யப்படும். நமது மாநிலத்தில் மட்டும் இன்றி வெளி மாநிலத்திலும் விற்பனை மையம் தொடங்கும் திட்டமும் அரசிடம் உள்ளது.
இந்தியாவில் இதுவரை இல்லாத திட்டம் தங்க நகைக்கடைகள் திறக்கிறது கர்நாடகா: முதலில் கட்டிகளை மட்டும் விற்க முடிவு
