இஸ்லாமாபாத்: அரிய வகை பறவையான, ‘ஹவுபாரா பஸ்டர்ட்’ எனப்படும் வெண்கழுத்து ராஜாளிகளை வேட்டையாடுவதற்கு சவுதி இளவரசர் முகமது பின் சல்மானுக்கு பாகிஸ்தான் சிறப்பு அனுமதி வழங்கியுள்ளது. ஹவுபாரா என்பது அரபு நாடுகளில் காணப்படும் அரிய வகை வெண் கழுத்து ராஜாளியாகும். இவை ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் அரேபியா உள்ளிட மத்திய ஆசிய நாடுகளில் இருந்து அதிகளவில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாலைவனத்துக்கு இடம் பெயரும். இந்த பறவைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால், பாகிஸ்தானில் இதை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சவுதி அரசர் முகமது பின் சல்மானுக்கு 2020-2021ம் ஆண்டு பருவ காலத்தில் இந்த கழுகுகளை வேட்டையாடுவதற்கு பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சகம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.
அரிய கழுகை வேட்டையாட சிறப்பு அனுமதி சவுதி இளவரசருக்கு பாகிஸ்தான் ஜிங்ஜாக்
