×

மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில், மத்திய மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது. நாளை முதல் அக்டோபர் 7 வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.மீனவர்களுக்கு எச்சரிக்கை:இன்றும், நாளையும் லட்சத்தீவு, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீசக்கூடும். அக்டோபர் 5, 6ல் வடக்கு ஆந்திர கடலோர பகுதி, அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளி வீச வாய்ப்பு இருக்கிறது. மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. …

The post மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 5 நாட்கள் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Central West Bengal Sea ,Chennai ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...