சென்னை: மனிதநேய மக்கள் கட்சி தலைமையகம் வெளியிட்ட அறிக்கை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி சேர்க்கையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அளித்து தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும் ஆளுநரை கண்டித்தும், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு அகில இந்திய மருத்துவக் கல்வி சேர்க்கையில் 50 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மறுத்த மத்திய பாஜ அரசை கண்டித்தும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை ஆளுநர் மாளிகை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.கனமழை காரணமாக நேற்று நடக்க இருந்த ஆர்ப்பாட்டம் பொதுமக்களின் நலன் கருதி ஒத்திவைக்கப்படுகிறது. வரும் 2ம்தேதிஆளுநர் மாளிகை முன்பு (சின்னமலை, சைதாப்பேட்டை) மாலை 4 மணியளவில் நடைபெறும்.
