புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் உயிர்ந்தோர் எண்ணிக்கை 1.02 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 66 லட்சத்தை தாண்டியது. இன்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகித நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
* புதிதாக 74,442 பேர் பாதித்துள்ளனர்.* இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 66,23,816 iஆக உயர்ந்தது.
* புதிதாக 903 பேர் இறந்துள்ளனர்.* இதனால், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,02,685 ஆக உயர்ந்தது.* தொற்றில் இருந்து ஒரே நாளில் 76,737 பேர் குணமடைந்துள்ளனர்.* இதனால் குணமடைதோர் எண்ணிக்கை 55,86,704 ஆக உயர்ந்துள்ளது.* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 9,34,427 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.* குணமடைந்தோர் விகிதம் 83.34% ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.55% ஆக குறைந்துள்ளது.* சிகிச்சை பெறுவோர் விகிதம் 14.11% ஆக குறைந்துள்ளது.* இந்தியாவில் ஒரே நாளில் 9,89,860 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.* இதுவரை 7,99,82,394 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.*கொரோனா பாதித்தோர் அதிகம் உள்ள மாநிலங்களில் மகாராஷ்டிரா முதல் இடத்திலும், ஆந்திரா 2-வது இடத்திலும், கர்நாடகா 3-வது இடத்திலும், தமிழ்நாடு 4-வது இடத்திலும் இருந்து வருகிறது.மாநிலங்கள் வாரியான பாதிப்பு விவரம்!!மகாராஷ்டிரா : சிகிச்சை பெறுவோர் : 255722 ; குணமடைந்தோர் : 1149603; இறப்பு : 38084தமிழகம் : சிகிச்சை பெறுவோர் :46120 ; குணமடைந்தோர் : 564092 ; இறப்பு : 9653டெல்லி : சிகிச்சை பெறுவோர் : 26450 ; குணமடைந்தோர் : 253784 ; இறப்பு : 9784 கேரளா : சிகிச்சை பெறுவோர் :84579 ; குணமடைந்தோர் : 144471 ; இறப்பு : 836கர்நாடகா : சிகிச்சை பெறுவோர் : 115593; குணமடைந்தோர் : 515782 ; இறப்பு : 9286ஆந்திரா : சிகிச்சை பெறுவோர் : 54400 ; குணமடைந்தோர் :658875 ; இறப்பு : 5981