மக்கள் நலப் பணியாளர் விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு

புதுடெல்லி: மக்கள் நலப்பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம், பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் சுமார் 13,500 பேரை கடந்த 2011ம் ஆண்டு பணியிலிருந்து அப்போதைய அதிமுக அரசு நீக்கியது. இதை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பணி நீக்கம் செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மாற்றுப்பணி வழங்குமாறு கடந்த 2014ம் ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த விவகாரத்தில் விழுப்புரத்தை சேர்ந்த தன்ராஜ் என்பவர் தரப்பில் வழக்கறிஞர் ராஜராஜனும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த தன்ராஜ் தரப்பு வழக்கறிஞர் ராஜராஜன், தேசிய மனித உரிமை ஆணையத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘‘பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள மக்கள் நலப்பணிளர்கள் அனைவருக்கும் ஊதிய நிர்ணயம், பணி நிரந்தரம் ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்தார். மனுவை பரிசீலனை செய்த மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ளது….

The post மக்கள் நலப் பணியாளர் விவகாரம் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு appeared first on Dinakaran.

Related Stories: