ஒரு அணியாக ஒற்றுமையாக விளையாடி தொடரை வென்றது மகிழ்ச்சி. உண்மை என்னவென்றால் ரோஹித் சர்மா, பும்ரா போன்ற ஒருநாள் டி20 போட்டிகளில் வளர்ந்த திறமையான வீரர்கள் இல்லாமல் தொடரை வென்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் 14 போட்டிகளுக்குள் விளையாடிய அனுபவம் உள்ள இளைஞர்கள். ஒவ்வொருவரும் அவர்களின் திட்டத்தை நன்கு உணர்ந்து களத்தில் செயல்படுத்தினார்கள். இளம் வீரர்கள் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தி பங்களிப்புச் செய்தார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
ரோஹித், பும்ரா என திறமையான வீரர்கள் இல்லாமல் தொடரை வென்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி; கேப்டன் கோலி பெருமிதம்
