சீன பொருட்களுக்கு 25% கூடுதல் வரி அமல்: அதிகாரப்பூர்வ வர்த்தகப் போரை தொடங்கியது அமெரிக்கா!

நியூயார்க்: சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு ரூ.2,34,000 கோடி வரி விதித்ததன் மூலம் சீனா அமெரிக்க இடையேயான வர்த்தக போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் ஏற்படும் சூழல் அண்மைக் காலமாக நீடித்து வந்தது. இந்நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க விதித்துள்ள 25% கூடுதல் வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான அதிகாரப்பூர்வமான வர்த்தக போர் தொடங்கியுள்ளது.

உலகின் இருபெரும் பொருளாதார மையங்களுக்கு இடையேயான வர்த்தக போர் பெரும் வர்த்தக பாதிப்பை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பை அடுத்து சீனா எதிர் தாக்குதலை தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சீனாவும் அமெரிக்க உற்பத்தி பொருட்கள் மீது 25% கூடுதல் வரி விதிப்பை தொடங்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சீனா அதன் பொருளாதார நடவடிக்கையை மாற்றிக் கொள்ளாவிட்டால் இந்த நடவடிக்கை தொடரும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்த வர்த்தக போரால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்திக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: