×

மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் விநியோகம்

 

திருத்தணி: மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்களை வட்ட வழங்கல் அலுவலர் குடும்ப தலைவிகளுக்கு விண்ணப்பங்கள் விநியோகம் செய்ய நியாய விலை கடை ஊழியர்களிடம் வழங்கினார். தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து, மாதந்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் ரூ.1000 வழங்குவது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், நேற்று மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை திருத்தணி வட்ட வழங்கல் அலுவலர் மலர்விழி நியாய விலை கடை ஊழியர்களிடம் வழங்கினார்.  இது குறித்து வட்ட வழங்கல் அலுவலர் கூறும்போது, விண்ணப்பங்கள் போதிய அளவுக்கு கையிருப்பில் உள்ளது. இந்தத் திட்டத்தில் தகுதியுடையவர்கள் அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். யாரும் பதற்றமடைய தேவையில்லை. நியாய விலைக் கடைப் பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு நியாய விலைக் கடை பகுதியில் முகாம்கள் நடைபெறும் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவை வீட்டில் நேரடியாக வழங்குவார்கள் என வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.

The post மகளிர் உரிமைத் தொகை திட்ட விண்ணப்பங்கள் விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Dinakaran ,
× RELATED ஆயுர்வேதத் தீர்வு!