×

பெற்றோரை இழந்த சோகத்தில் பட்டதாரி வாலிபர் தற்கொலை

புழல்: புழல் அடுத்த புத்தகரம், வெங்கடசாய் நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (39). பட்டதாரியான இவர், குடும்பத்துடன் சொந்த வீட்டில் வசித்து வந்தார். இவரது பெற்றோர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டனர். இந்நிலையில் பெற்றோரை இழந்ததாலும், திருமணமாகாத விரக்தியிலும் குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி மன உளைச்சலில் இருந்து வந்த சுரேஷ், நேற்று முன்தினம் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புழல் போலீசார், சுரேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெற்றோரை இழந்த சோகத்தில் பட்டதாரி வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Puzhal ,Suresh ,Venkatasai ,Budhagaram ,
× RELATED புழல் காவாங்கரை பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் கைது