- VAO இரண்டும்
- கிருஷ்ணகுப்பம் கிராமம்
- ஆர்.கே. பத்தா
- மக்மாம்புரம் ஊராட்சி, திருவள்ளூர் மாவட்டம்
- ஆர் கே பெட்டா ஒன்றியம்
- கிருஷ்ணகுப்பம்
ஆர்.கே.பேட்டை: கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஒன்றியம், மாக்மாம்புரம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த, ஊராட்சியில் உள்ள கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. இக்கட்டிடத்தில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.
இதனால், மழை காலங்களில் கட்டிடத்தில் தண்ணீர் கசிவதால், கிராம பதிவேடுகளை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இக்கட்டிடத்தின் அருகில் முட்புதர்கள் சூழ்ந்து விஷ பூச்சிகள் அதிகளவில் காணப்படுவதால் அருகிலுள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து இடிந்து விழும் நிலையில் காணப்படும் கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தினை இடித்து அகற்றிவிட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம் appeared first on Dinakaran.