×

திருத்தணி ஒன்றியத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை

திருத்தணி: திருத்தணி ஒன்றிய அதிமுக சார்பில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் வேலஞ்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு முன்னாள் ஆவின் மாவட்டத் தலைவர் வேலஞ்சேரி கவிச்சந்திரன் ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர், மாவட்டச் செயலாளர் பி.வி.ரமணா, முன்னாள் எம்.பி., அமைப்பு செயலாளர் திருத்தணி கோ.அரி ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படத்துடன் கூடிய புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

The post திருத்தணி ஒன்றியத்தில் அதிமுகவினருக்கு உறுப்பினர் அட்டை appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Thiruthani Union ,Thiruthani ,Thiruthani Union AIADMK ,Velanchery ,Aavin District ,President ,Velancheri Kavichandran ,
× RELATED தேர்தல் வழக்கு: அதிமுக முன்னாள்...