- பிராந்திய அபிவிருத்தி அலுவலகம்
- சட்டமன்ற உறுப்பினர்
- திருவள்ளூர்
- பூந்தமல்லி எம்.எல்.ஏ
- திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்
- புந்தமல்லி சட்டமன்றத் தொகுதி
- தின மலர்
திருவள்ளூர்: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பூந்தமல்லி எம்எல்ஏ, திட்ட இயக்குனர் பங்கேற்றனர். பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியத்தில் அடங்கிய ஊராட்சிகளில் கடந்த 2021-22, 2022-23 ஆகிய நிதி ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது. இதில், ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் எம்.பர்கத்துல்லா கான், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குணசேகரன், கே.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் பூந்தமல்லி தொகுதி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை.ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மேம்பாட்டு திட்ட பணிகள், குடிநீர் பணிகள், கட்டிடப் பணிகள் மழைநீர் கால்வாய் பணிகளின் நிலை குறித்தும், முடிவடைந்த பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். மேலும் பருவ மழை தொடங்க இருப்பதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் எம்எல்ஏ ஆலோசனைகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் தென்னவன், ஒன்றிய கவுன்சிலர்கள் எத்திராஜ், பூவண்ணன், ஊராட்சிமன்ற தலைவர்கள் 26 வேப்பம்பட்டு சதா பாஸ்கரன், சேலை கோவர்தனன், பெருமாள்பட்டு சீனிவாசன், கீழானூர் உஷா பிரேம், புல்லரம்பாக்கம் தமிழ்வாணன், செவ்வாப்பேட்டை டெய்சி ராணி அன்பு, ஈக்காடு லாசனா சத்யா மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
The post வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம்: எம்எல்ஏ, திட்ட இயக்குனர் பங்கேற்பு appeared first on Dinakaran.