×
Saravana Stores

போச்சம்பள்ளியில் முள்ளங்கி விலை வீழ்ச்சி

போச்சம்பள்ளி, ஜூலை 30: கிருஷ்ணகிரி மாவடடத்தில் விவசாயிகள் பரவலாக முள்ளங்கி சாகுபடி செய்துள்ளனர். ஓசூர், தளி உள்ளிட்ட வனப்பகுதியையொட்டி இடங்களில் மட்டுமே முள்ளங்கி சாகுபடி செய்து வந்த நிலையில், போச்சம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் முள்ளங்கி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த சில வாரங்களாக, முள்ளங்கி கிலோ ₹25 முதல் ₹30 வரை விற்பனை செய்யப்பட்டது. விலை உயர்வு காரணமாக, விவசாயிகள் சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தல், அனைத்து தோட்டங்களிலும் ஒரே நேரத்தில் முள்ளங்கி சாகுபடி செய்தனர். தற்போது அறுவடையை துவக்கி உள்ள நிலையில் சந்தைக்கு முள்ளங்கி வரத்து அதிகரித்துள்ளது. இதனால், விலை குறைந்து கிலோ முள்ளங்கி ₹8 முதல் ₹10 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் முள்ளங்கி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

The post போச்சம்பள்ளியில் முள்ளங்கி விலை வீழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Bochampalli ,Bochambally ,Krishnagiri district ,Hosur ,Thali ,Dinakaran ,
× RELATED போச்சம்பள்ளி வாரசந்தையில் ரூ.5 கோடிக்கு ஆடுகள் விற்பனை