பொருளாதார முன்னேற்றத்திற்காக கடனுதவி

தர்–ம–புரி, மே 17: தர்–ம–புரி மாவட்–டத்–தில் பிற்–ப–டுத்–தப்–பட்–டோர், மிகப்–பிற்–ப–டுத்–தப்–பட்–டோர் மற்–றும் சீர்–ம–ர–பி–னர் வகுப்–பைச் சேர்ந்–த–வர்–கள் பொரு–ளா–தார முன்–னேற்–றத்–திற்–காக கட–னு–தவி வழங்–கப்–ப–டு–கி–றது. இது–கு–றித்து தர்–ம–புரி மாவட்ட கலெக்–டர் சாந்தி வெளி–யிட்–டுள்ள செய்–திக்–கு–றிப்–பில் கூறி–யி–ருப்–ப–தா–வது: பிற்–ப–டுத்–தப்–பட்–டோர், மிகப்–பிற்–ப–டுத்–தப்–பட்–டோர் மற்–றும் சீர்–ம–ர–பி–னர் வகுப்–பி–னைச் சார்ந்த தனி–ந–பர்–கள் மற்–றும் குழுக்–கள் தங்–க–ளது பொரு–ளா–தார முன்–னேற்–றத்–திற்–காக சாத்–தி–யக்–கூ–றுள்ள சிறு தொழில்–கள் மற்–றும் வியா–பா–ரம் செய்ய பொது காலக்–க–டன், பெண்–களுக்–கான புதிய பொற்–கா–லக்–க–டன், பெண்–களுக்–கான நுண்–க–டன், ஆண்–களுக்–கான நுண்–க–டன் மற்–றும் கறவை மாடுக்–க–டன் ஆகிய கடன் திட்–டங்–களுக்கு தமிழ்–நாடு பிற்–ப–டுத்–தப்–பட்–டோர் பொரு–ளா–தார மேம்–பாட்–டுக் கழ–கம் மூலம் கட–னு–தவி வழங்கி வரு–கி–றது.

விண்–ணப்–ப–தா–ரர் பிற்–ப–டுத்–தப்–பட்–டோர், மிகப்–பிற்–ப–டுத்–தப்–பட்–டோர் மற்–றும் சீர்–ம–ர–பி–னர் இனத்–த–வ–ரா–ரக இருத்–தல் வேண்–டும். குடும்ப ஆண்டு வரு–மா–னம் ₹3 லட்–சத்–திற்கு மிகா–மல் இருக்க வேண்–டும். விண்–ணப்–தா–ரர் 18 வயது பூர்த்தி அடைந்–த–வ–ரா–க–வும், 60 வய–துக்கு மேற்–ப–டா–த–வ–ராக இருத்–தல் வேண்–டும். குடும்–பத்–தில் ஒரு நப–ருக்கு மட்–டுமே கட–னு–தவி வழங்–கப்–ப–டும். பொது–கா–லக் கடன் திட்–டம் மற்–றும் தனி–ந–பர் கடன் திட்–டம் மூலம் அதி–க–பட்–ச–மாக ₹15 லட்–சம் வரை கட–னு–தவி வழங்–கப்–ப–டு–கி–றது. ஆண்டு வட்டி விகி–தம் 6 சத–வீ–தம் முதல் 8 சத–வீ–தம் வரை விதிக்–கப்–ப–டு–கி–றது. பெண்–களுக்–கான புதிய பொற்–கால கடன் திட்–டத்–தின் கீழ் அதி–க–பட்–சம் ₹2 லட்–சம் வரை கட–னு–தவி வழங்–கப்–ப–டு–கி–றது.

ஆண்டு வட்–டி–வி–கி–தம் 5 சத–வீ–தம், நுண்–க–டன் வழங்–கும் திட்–டத்–தின் கீழ் மக–ளிர் சுய உத–விக்–குழு உறுப்–பி–னர் ஒரு–வ–ருக்கு அதி–க–பட்–ச–மாக ₹1.25 லட்–சம் வரை–யும் குழு ஒன்–றுக்கு அதி–க–பட்–ச–மாக ₹15 லட்–சம் வரை–யும் வழங்–கப்–ப–டு–கி–றது. ஆண்டு வட்–டி–வி–கி–தம் 4 சத–வீ–தம். மக–ளிர் சுய உத–விக்–குழு தொடங்கி 6 மாதங்–கள் பூர்த்–தி–யா–கி–யி–ருக்க வேண்–டும். திட்ட அலு–வ–ரால் (மக–ளிர் திட்–டம்) தரம் செய்–யப்–பட்–டி–ருக்க வேண்–டும். ஒரு குழு–வில் அதி–க–பட்–சம் 20 உறுப்–பி–னர்–கள் அனு–ம–திக்–கப்–ப–டு–வார்–கள். எனவே, தர்–ம–புரி மாவட்–டத்–தில் வசிக்–கும் பிற்–ப–டுத்–தப்–பட்–டோர், மிகப்–பிற்–ப–டுத்–தப்–பட்–டோர் மற்–றும் சீர்–ம–ர–பி–னர் வகுப்–பி–னைச் சார்ந்த தனி–ந–பர்–கள் மற்–றும் குழுக்–கள் கடன் விண்–ணப்–பங்–க–ளைப் பெற்று உரிய ஆவ–ணங்–களு–டன் சமர்–பித்து பயன்–பெ–ற–லாம். இவ்–வாறு கலெக்–டர் தெரி–வித்–துள்–ளார்.

The post பொருளாதார முன்னேற்றத்திற்காக கடனுதவி appeared first on Dinakaran.

Related Stories: