பொன்னமராவதி வாரச்சந்தை மேம்படுத்தும் பணி தீவிரம்

பொன்னமராவதி, ஆக.30: பொன்னமராவதி வாரச்சந்தை பகுதி மேம்பாடு செய்யும் பணி மேற்கூரை அமைக்கும் விரைவாக நடைபெற்று வருகிறது. பொன்னமராவதி பேரூந்து நிலையத்தின் கிழக்குப் பகுதியில் பேரூராட்சி சந்தை மற்றும் தினசரி கடைகள் உள்ளது. வாரம் ஒருமுறை சந்தை நடப்பது தான் தமிழகம் முழுவதும் வழக்கமாக உள்ளது. ஆனால் பொன்னமராவதியில் சனிக்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை என வாரம் இரண்டு நாள் சந்தை நடப்பது இங்கு மட்டுமே என்பதுதான் தனிச்சிறப்பு.

இந்த சந்தைக்கு புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம், திருமயம் ஒன்றியப் பகுதியில் உள்ளவர்கள், திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியப்பகுதி, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் மற்றும் எஸ்.புதூர் ஒன்றியப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் காய்கள் வாங்க இந்த சந்தைக்கு தான் வந்து செல்கின்றனர். இந்த சந்தைப் பகுதியில் சிறிது மழை பெய்தால் கூட சேரும் சகதியுமாக காணப்பட்டது காய்கள் வாங்க சகதியில் சென்று மக்கள் வாங்கிச் சென்றனர். மழை பெய்தால் காய்கறி வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பாடு திண்டாட்டமாய் போய்விடும். சகதியாக இருக்கும் என பொதுமக்கள் காய்கள் வர தயங்குவார்கள். இந்த சந்தைப்பகுதியை மேம்பாடு செய்யவேண்டும் என பல ஆண்டுகளாக விவசாயிகள் பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதும் சட்டஅமைச்சர் ரகுபதியின் முயற்சியால் பொன்னமராவதி சந்தைப்பகுதியை மேம்பாடு செய்ய ரூ.2.17 கோடி மதிப்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த ஆண்டு மே 13ம் தேதி பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக இங்கிருந்த சந்தைக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது. இதன் பின்னர் தரைத்தளம் போடப்பட்டு பல மாதங்கள், தரைத்தளத்தில் ஜல்லிகள் கொட்டப்பட்டு, பீம்கள் நிறுத்தப்பட்டு என ஒவ்வொறு பகுதி பணிகள் நடந்து பல மாதங்கள் கழித்து அடுத்த பணி என நடைபெற்று வந்தது.

தற்போது மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சந்தை பகுதியில் இருந்த கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு சந்தை வீதியில் தற்காலி கடைகள் போடப்பட்டுள்ளது. அண்ணாசாலை மெயின்ரோட்டில் இருந்து பள்ளி, கடைகள், அலுவலகங்கள் செல்லும் சந்தை வீதியில் சனி, செவ்வாய் சந்தைக் கிழமைகளில் சாலை ஓரங்களில் கடைகள் போடுவதால் பெரும் போக்குவரத்து சிரமத்திற்கிடையே சென்று வருகின்றனர். மேலும் காய்கள் விற்பனை செய்பவர்கள் ரோட்டின் இருபுறமும் போட்டுள்ளதால் இவ்வழியாக யாரும் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்த நிலையினை கருத்தில் கொண்டு, சந்தைப்பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பொன்னமராவதி வாரச்சந்தை மேம்படுத்தும் பணி தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: