பொதுநல அறக்கட்டளை சார்பில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் இலவச சேவை முகாம்

 

தாராபுரம்:திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நபிவழி மன்றத்தின் பொது நல அறக்கட்டளை சார்பில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் இலவச் சேவை சிறப்பு முகாம் பெரிய கடை வீதி உள்ள புது மஸ்ஜித் வளாகத்தில் உள்ள முகமதியா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நேற்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் கௌரவ தலைவர் அலி அகமது தலைமை தாங்கினார். முகாமில் அறக்கட்டளை நிர்வாகிகள் காஜா செரீப், முகமது தவ்பிக்,ராஜிக்,அபுதாஹிர்,அபுல் ஹசன்,நசுருதீன்,சையத் ரியாஸ்,முகம்மது இக்பால்,அன்வர் அலி ஆகியோர் கொண்ட குழுவினர் பொதுமக்களுக்கு பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை, மற்றும் தேவையான ஆவணங்களை சரிபார்த்து விண்ணப்பித்து கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் நேற்று முகாமில் கலந்து கொண்ட 74 நபர்களில் 42 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இவர்களுக்கு பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட ஆவணங்களுடன் நேரில் வந்து சமர்ப்பிக்க ஆன்லைன் மூலம் நேரம் கொடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அனைத்து சமுதாயத்தைச் சார்ந்த பொதுமக்கள் பலர் கலர் கலந்து கொண்டு புதிய பாஸ்போர்ட் கேட்டும் ஏற்கனவே பெற்ற பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்கவும் விண்ணப்பங்களை அளித்தனர்.

The post பொதுநல அறக்கட்டளை சார்பில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் இலவச சேவை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: