×

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தஞ்சை: பொங்கல் திருநாளையொட்டி வரும் 13ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கிளை இயக்க உள்ளது. சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது.இதேபோல் திருச்சியிலிருந்து தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும், அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில் இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மேலும் வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையிலிருந்து பொதுமக்கள் எளிதாக பயணம் செய்யும் வகையில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம், தஞ்சை, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தட பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்தும், கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் தட பேருந்துகள் கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்திலிருந்தும் இயக்கப்பட உள்ளது.மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக (கும்பகோணம்) லிட் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post பொங்கல் பண்டிகையையொட்டி அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Pongal festival ,Thanjavur ,Tamil Nadu Government Transport Corporation ,Kumbakonam branch ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் சம்பா...