பெரியகுளம் அருகே கும்பக்கரையில் 9 மாதமாக திறக்கப்படாத அருவி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

பெரியகுளம்: பெரியகுளம் அருகே, 9 மாதங்களாக கும்பக்கரை அருவி திறக்கப்படாததால், விடுமுறைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொரோனா 2வது அலை பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல் அருவியில் குளிக்கவும், சுற்றிப்பார்க்கவும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்துள்ளது. தமிழகம் முழுவதும் பெரும்பான்மையோருக்கு கொரோனா முதல் தவணை தடுப்பூசி போடப்பட்ட நிலையில், கொரோனா தொற்று பரவலும் குறைந்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அருவி உள்ளிட்ட அனைத்து சுற்றுலாத் தலங்கள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவியானது இன்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதிக்கப்பட்டாமல் கடந்த 9 மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது. இதனால், விடுமுறை நாட்களில் வெளி மாட்டத்தில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்காததால், ஏமாற்றதுடன் திரும்பி செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதித்து திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பெரியகுளம் அருகே கும்பக்கரையில் 9 மாதமாக திறக்கப்படாத அருவி: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: